ஒடிசாவின் சாம்பல்பூரில் இருந்து ஈரோட்டுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சாம்பல்பூர், ஈரோடு சிறப்பு ரயில் (08311) நாளை (ஆகஸ்ட் 21) முதல் நவம்பர் 27 வரை புதன்கிழமைகளில் சாம்பல்பூரில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு வியாழன் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். ஈரோட்டில் வெள்ளிக்கிழமை மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூர் சென்றடையும்.