சென்னை மாதவரம் மகளில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ, காவலர் நித்யா ஆகியோர் மதுராந்தகம் அருகே டூவீலரில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தனர். அவர்கள் குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது இறந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், உயிரிழந்த இரு பெண் காவலர்களும் அலுவல் நிமித்தமாக செல்லவில்லை என்றும், குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது விபத்து நடந்தது என்பது முற்றிலும் தவறானது எனவும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.