பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்

2604பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசினம் செய்ய நள்ளிரவில் இருந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து விநாயகரை தரிசித்துச் சென்றனர்.

பக்தர்கள் அதிகமாக வருவதால் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3: 30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4: 30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மூலவர் தங்கக் கவசத்திலும், உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளியும் அருள்பாலித்தனர்.

தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை நடைபெற்றது. காலை 8:00 மணிக்கு காலச்சந்தி, நிகழ்வு நடைபெற்றது காலை 11:00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்து மூலவருக்கு அபிேஷகம் மாலை 5:30 மணிக்கு சாயரட்சை, இரவு 7:30 மணிக்கு அர்த்தசாமம் பூஜை நடந்து இரவு 8: 30 மணிக்கு நடை சாத்தப்படும். புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவதால் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணித்தும் வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி