சப் கலெக்டரை நெகிழ்ச்சியடைய செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்

55பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள உலகம் சுற்றிய தமிழர் சோமலெ நினைவு கிளை நூலகத்தில் "நூலக வார விழா" நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வர்ஸ் பங்கேற்று அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களை ஆய்வு செய்தார். மேலும் சமூக ஆர்வலர் சோமலெ தமிழுக்காக தொண்டாற்றிய சிறப்புகளையும் அவர் இயக்கிய நூல்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து நூலகத்திற்கு நாள்தோறும் வருகை புரியும் பள்ளி மாணவர்கள் இடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம் இந்திய வரைபடத்தை காண்பித்து இதில் நமது மாவட்டத்தில் நெற்குப்பை எங்கு உள்ளது என்று ஒரு ஆசிரியர் போல் மாறி கேள்வி கேட்டதற்கு சற்றும் தயங்காமல் அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் உடனே பதில் அளித்தது, அதேபோல் அங்கு பயிற்றுவிக்கப்படும் கணினி பாடப்பிரிவினை மாணவிகள் செய்து காண்பித்து அசத்திய விதம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கி பாராட்டினார். மேலும்குழந்தைகளுடன் ஸ்நேகமாக பேசி அவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தின் முக்கியதுவத்தை எடுத்துறைத்தார். மாணவர்களோடு கலந்துறையாடியதால் நெகிழ்ச்சியடைந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி