சிவகங்கை மாவட்டம் தெக்கூா் அருகே திருக்களம்பூா் ஊராட்சி குமாரப்பட்டி கிராமத்தில் நாகப்பன் மகன் சரவணன் என்பவா் வீட்டிற்குள் சுமாா் 8 அடி நீளத்தில் பாம்பு நுழைவதை கண்ட வீட்டினா் அதிா்ச்சியடைந்து பொன்னமராவதி தீயணைப்பு மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த மீட்புப்படையினா் பதுங்கியிருந்த பாம்பு அச்சுறுத்தும் வகையில் சீறியது. அதனை லாவகமாகப் பிடித்து வன்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.