மானாமதுரை தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

68பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் KMS 2022-2023-ஆம் கோடை பருவத்தில் காரைக்குடி தாலுகா, S. R. பட்டிணத்தில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திருப்புவனம் தாலுகாவில் திருமாஞ்சோலையில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு 448 மெ. டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, KMS 2022-2023-ஆம் கோடை பருவத்தில் முதற்கட்டமாக திருப்புவனம் தாலுகாவில் நெல்முடிக்கரை, ஏனாதி மற்றும் காரைக்குடி தாலுகாவில் S. R. பட்டிணம் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுநாள் வரை 251 மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் நலன் கருதி கோடை பருவத்தில் இரண்டாம் கட்டமாக இளையான்குடி தாலுகாவில், கீழநெட்டூர், மானாமதுரை தாலுகாவில் பீசர்பட்டிணம் மற்றும் குவளைவேலி ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று காலை சுமார் 9 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி