மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

83பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் சார்பில் 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்கும் மாநில தரவரிசை இறகுப்பந்து போட்டிகள் கடந்த 11ஆம் தேதி துவங்கியது. சென்னை திருப்பூர் கோயம்புத்தூர் சேலம் நாமக்கல் திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து இந்த போட்டியில் 1300 வீரர்கள் பங்கேற்றனர். போட்டி காரைக்குடி ALS ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட நடுவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று போட்டியை சிறப்பாக நடத்தினர்.. சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக மாநில தரவரிசை போட்டி இந்த ஆண்டு துவங்கியுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்து இறுதி சுற்றுகள் நடைபெற்றது. பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ் குமார் கலந்துகொண்டு சான்றிதழ்கள், மற்றும் வெற்றிக்கோப்பைகளை வழங்கினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் தலைவர் இராமகிருஷ்ணன் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் செயலாளர் பாரூக் உட்பட சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி