திருப்புவனம் புதுார் பகுதியில் கல்லூரி மாணவி மாயம்

73பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் பகுதியைச் சேர்ந்த தஸ்லிபா பானு(19). இவர் மதுரையிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிபிஏ- முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கல்லூரிமாணவியின் தந்தை அப்துல்சேட், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் நேற்று வழக்குப்பதிவு செய்து, இன்று காலை 11. 30 மணியளவில் காணாமல் போன மாணவி குறித்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி