சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கோல்டன் கிங் சதுரங்க கழகம் சார்பில் 4ம் ஆண்டாக மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 9 வயதுக்குட்டோர், 13 வயதுக்குட்பட்டோர் மற்றும் 25 வயது உட்பட்டோர் என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மாவட்ட முழுவதும் இருந்து 180 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வாழ்க்கையில் தொலைநோக்கு பார்வையுடன், திட்டமிட்டு செயல்பட்டால், வெற்றி நிச்சயம்! என்பதனை ஊக்குவிக்கும் விதமாக நடைபெறும் இந்த சதுரங்க போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 6 சுற்றுகள் நடைபெற்று, முதல் 12 இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.