கருவியப்பட்டி கிராமத்தில் சுமார் 100 பவுன் நகை கொள்ளை

71பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் அழகாபுரி அருகே உள்ள கருவியப்பட்டி கிராமத்தில் சுமார் 100 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை கருவியப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சேதுராமன் இவர் கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறார் கருவியப்பட்டி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நிர்வாக தலைவராக உள்ளார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு கோவிலில் உள்ள நகைகளையும் வீட்டில் வைத்துள்ளார் இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த கோயில் நகை மற்றும் அவர்களது வீட்டு நகை என சுமார் 100 பவுன் தங்க நகைகள் வெள்ளி சாமான்கள் 50, 000 ஆயிரம் ரூபாய்கள் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் இது தொடர்பாக பள்ளத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இதே போல் அவரது அருகில் வீட்டில் இருந்த மணிகண்டன் என்பவர் வீட்டையும் உடைத்து அங்கும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது கருவியப்பட்டி கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் மற்றும் கோயில் நகை கொள்ளை போனது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி