சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று (ஆகஸ்ட் 19) அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், நோய்க்கான சரியான தன்மையை மருத்துவமனை வெளியிடவில்லை. யெச்சூரிக்கு சமீபத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.