மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் மீது 11ஆம் வகுப்பு மாணவி, ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, ஆசிரியர் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்ததாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ஆசிரியர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியருக்கு ஆதரவாக அப்பள்ளி மாணவர்கள், “மூர்த்தி சார் வேண்டும்” என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.