திண்டுக்கல் அருகே புதைக்கப்பட்ட பிணங்களை காணவில்லை என கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை என கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதைக்கப்பட்ட சடலங்களை மண்ணோடு மண்ணாக இரவில் அள்ளிச்சென்று விட்டதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.