அதிமுக போராட்டத்திற்கு சீமான் ஆதரவு

58பார்த்தது
அதிமுக போராட்டத்திற்கு சீமான் ஆதரவு
சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாதக முழு ஆதரவு அளிப்பதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு. சீமான் அவரது எக்ஸ தளப்பக்கத்தில், "இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி