சிரியாவில் பள்ளி குழந்தைகள் வாகனம் கவிழ்ந்து விபத்து

74பார்த்தது
சிரியாவில் பள்ளி குழந்தைகள் வாகனம் கவிழ்ந்து விபத்து
சிரியாவின் வடமேற்கு பகுதியில் டார்குஷ் நகரின் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது . விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மலைக் குன்றின் ஓரத்திலும் ஆற்றிலும் சுமார் 6 மணி நேரம் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றதற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி