நாளைய புறநகர் ரயில் சேவைக்கான அட்டவணை வெளியீடு

74பார்த்தது
நாளைய புறநகர் ரயில் சேவைக்கான அட்டவணை வெளியீடு
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 28) காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30க்கு மேலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் பல்லாவரம் - எழும்பூர், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி