சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பூமலை இவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் சிவா வயது 26 திருமணம் ஆகாத இளைஞர் தனது செல்போனில் அப்பா என்னுடைய இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என வீடியோ பதிவு செய்துவிட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனார் என கூறப்படுகிறது.
காணாமல் போன மகனை எங்கேயும் தேடி கிடைக்காததால் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்த பூமலை இரண்டு நாட்களுக்குப் பிறகு அருகில் இருந்த கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த வாழப்பாடி போலீசாரும் தீயணைப்பு போலீஸ்சாரும் சடலமாக இருந்த சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்து போன சிவாவின் இறப்பில் வேறு ஏதும் சந்தேகங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.