மகுடஞ்சாவடி ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

56பார்த்தது
மகுடஞ்சாவடி ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றிய தி. மு. க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மகுடஞ்சாவடி ஆர். கே. திருமண மண்டபத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி எம். பி. தலைமை தாங்கி பேசுகையில், வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி. மு. க. வினர் தயாராக வேண்டும். வீடுகள் தோறும் சென்று இளைஞர்களை அதிக அளவு உறுப்பினராக்க வேண்டும் என்றார். ஒன்றிய செயலாளர் பச்சமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், எலிசபெத் ராணி, மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய நிர்வாகிகள் அய்யாவு, கதிரவன், சக்திவேல், மகேஸ்வரி, புஷ்பநாதன், தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி