2½ மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

77பார்த்தது
2½ மாதத்திற்கு பிறகு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் கூட்டம் ஆகியவை நடைபெறவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த 2½ மாதத்திற்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி