சிறுமிக்கு பாலியல் தொல்லை 3-வது கணவர் மீது தாய் புகார்

81பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை 3-வது கணவர் மீது தாய் புகார்
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த 39 வயது பெண், ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர். தற்போது சதீஷ்குமார் என்பவருடன் வசித்து வந்தார். முதல் கணவருக்கு பிறந்த 14 வயது மகளும் அவருடன் உள்ளார். இந்தநிலையில் சதீஷ்குமார், அந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3-வது கணவர் மீது தாய் போலீசில் புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி