காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறை கைதிகளுக்கிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதற்கு சேலம் சிறை சூப்பிரண்டு வினோத் தலைமை தாங்கினார். ஒய். எம். சி. ஏ. பொதுச்செயலாளர் ஜோஸ், திரைப்பட நடிகர் பெருமாள் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் சேலம் சிறை கைதிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். பின்னர் சமூக ஊடகங்கள் நன்மை தருகிறதா? தீமை தருகிறதா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.