சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.