சேலத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை

70பார்த்தது
சேலத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சி. எஸ். ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் 2024-ம் ஆண்டு அனைவருடைய வாழ்வில், வளம் பெறவும், நோய் நொடியின்றி வாழவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டை கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய செயலாளர் சிமியூன் செல்வராஜ், பொருளாளர் அருள்ராஜ், திருமண்டல உறுப்பினர்கள் தியாபி, ஜெய்சிங் ராஜேந்திரன், சுபாரவி ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள குழந்தை இயேசுபேராலயத்தில் பாதிரியார் ஜோசப்பிலாசர் தலைமையிலும், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயத்தில் ஆயர் பெட்ரிக்தாணுபிள்ளை தலைமையிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சூரமங்கலத்தை அடுத்து உள்ள ஆண்டிப்பட்டி அப்போஸ்தல விசுவாச எழுப்புதல் சபையில் போதகர்கள் ஆரோன், காட்வின் தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் பலர் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you