ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்து உறுதி செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக வேறு நபரை அனுப்பி, பொருட்களை வாங்க அனுமதி தரப்பட்டாலும் இந்த நடைமுறையில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்த சேவைக்கு, www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.