இந்தியும், சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு, அதில் கை வைப்பது ஆபத்து. கட்டாயப்படுத்தி ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். எனவே இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.