வன்னியர் சங்க மாநில தலைவரை கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பேசி உள்ளார். இதை கண்டித்து வன்னியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.
சேலத்தில் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமையில் வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி மற்றும் அமைப்பு நிர்வாகிகளுடன் உதவி கமிஷனர் நிலவழகன் மற்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவில், வன்னியர் சங்க மாநில தலைவருக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. நிர்வாகியை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் இந்த அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.