சேலத்தில் மகன் இறந்த 5-வது நாளில் தந்தை தற்கொலை

77பார்த்தது
சேலத்தில் மகன் இறந்த 5-வது நாளில் தந்தை தற்கொலை
சேலம் அஸ்தம்பட்டி வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51), ஆட்டோ டிரைவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகன் சவுந்தர் (24) ஒரு விபத்தில் இறந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அதில் இருந்து மீள முடியாமல் சிவக்குமார் தவித்தார். நேற்று வீட்டில் சிவக்குமார் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி