சேலம்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மணி எம்.எல்.ஏ

62பார்த்தது
சேலம்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மணி எம்.எல்.ஏ
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி சந்தைப்பேட்டை முதல் சின்னேரிகாடு செல்லும் ரோட்டில் முனியப்பன் கோவில் அருகில் தரைப்பாலம் மரம், செடி, கொடிகளால் அடைக்கப்பட்டதால் தரைப்பாலத்தை ஒட்டியுள்ள மண்கரை, தார்ச்சாலையை அடித்து சென்றது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. மழையால் பாதிக்கப்பட்ட இடத்தை மணி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அவரிடம், பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரும்படி விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மணி எம்.எல்.ஏ. கூறினார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சித்தேஸ்வரன், காடையாம்பட்டி நகர செயலாளர் ஆனந்தன், மாவட்ட உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி