மேட்டூர் - Mettur

வீரக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

வீரக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் தங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றனர். இதனை தொடர்ந்து பெரியசோரகை நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, நங்கவள்ளி தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். அதன்பிறகு நங்கவள்ளி வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களில் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வீரக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் கல்வித்திறன், வருகைப்பதிவேடுகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்தார். அதேபோன்று, குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசிகள் மற்றும் பாம்புக்கடி விஷ முறிவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என டாக்டர்களிடம் கேட்டறிந்தார். 2-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்கள்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా