சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி இவரிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து மாரியப்பன் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தொழிலாளியிடம் பணம் பறித்தது குள்ளவீரன்பட்டி பகுதியை சேர்ந்த ரவுடி சிவப்பிரகாஷ் (வயது 34), சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ரவுடி மோகன்ராஜ் (33) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேட்டூர் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். தர்பூசணி வியாபாரி. இவர் மேட்டூர் பஸ் நிலையத்தில் தர்பூசணி விற்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மாதையன்குட்டை எலிக்கரடு பகுதியை சேர்ந்த கோபிநாத், கத்தியை காட்டி மிரட்டி பிரபாகரனிடம் பணத்தை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி கோபிநாத்தை கைது செய்தனர்.