ஆணைவாரி நீர்வீழ்ச்சியில்  சுற்றுலாபயணிகள்குளித்து மகிழ்ச்சி

67பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் முட்டல் கிராமம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆத்தூர் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்து விடுமுறை நாட்களில் தனது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தற்போது ஆர்ப்பரித்து  கொட்டி வருகிறது,
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில்  ஆர்ப்பரித்த கொட்டும்  தண்ணீர் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து  நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி