சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க.வில் நகர, ஒன்றிய, பேரூர் அளவில் மாணவர் அணிக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே நேர்காணலுக்கு விருப்பம் உள்ளவர்கள், கல்லூரி மாணவர்கள் சேலம் ராம்நகரில் உள்ள மேற்கு மாவட்ட தி.மு.க. அலு வலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் அதற்கான விண்ணப்ப படிவத்தை நேரடியாகவே பெற்றோ அல்லது http//surl. li/jmwoy என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைநகல் விண்ணப்பத்துடன் இணைத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்து இருக்க வேண்டும். அல்லது தற்போது கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும் (அதாவது பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு). விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வருகிற 22- ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி அளவில் சேலம் மாவட்ட அலுவலகம், கலைஞர் மாளிகையில், மாநில மாணவர் அணி இணை செயலாளர் எஸ். மோகன், மாநில மாணவர் அணி துணை செயலாளர்கள் பொன்ராஜ், சேலம் தமிழரசன், கோகுல் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.