சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியன் கோவிலில் 50 ஆம் ஆண்டு சூரசம்கார விழா நேற்று இரவு தொடங்கியது மேலும் இந்த சூரசம்கார விழா தினமும் முருகனுக்கு அபிஷேகம் தீபாராதனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று ஏழாவது நாள் சூரசம்காரம் நடைபெறும் அதைத் தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், முதல் நாளில் வடசென்னிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை உடன் தொடங்கி விநாயகப் பெருமானுக்கு பால் பன்னீர் தயிர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு பல்வேறு வண்ண அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசித்தனர்.