சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியில் திங்கட்கிழமைதோறும் மாடு விற்பனை வாரச்சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, இன்று கூடிய வாரச்சந்தைக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மாடுகள் ரகத்தைப் பொறுத்து ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை விலை போனதாகவும், ரூ. 40 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.