நீதிமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உடன் பணிபுரிந்தோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 48 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஆனால், ஊரடங்கால் முழு அளவில் செயல்படாமல், குறைந்த வழக்குகளே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நீதிமன்றம் வருவோருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை, சானிடைசர் வழங்கல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
சில நாளுக்கு முன், நீதிபதி ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மூத்த நீதிபதிகள் தனிமைப்படுத்திக்கொண்டனர். நேற்று, அங்கு பணிபுரியும், 50 வயது ஊழியருக்கு, தொற்று உறுதியானது. அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.