கொரோனா பரவலை தடுக்க, பொது இடங்களில் எச்சில் துப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார்.
இதனால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். கடந்த ஒரு வாரத்தில், சேலத்தின், மூன்று சரக பகுதியில், பொது இடங்களில் எச்சில் துப்பியது, புகைப்பிடித்தது என, 220 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர். இதில், நேற்று முன்தினம் மட்டும், 16 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.