முட்டல் நீர்வீழ்ச்சி குவிந்த சுற்றுலா பயணிகள்ஆனந்த குளியல்

58பார்த்தது
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் பல்வேறு சுற்றுலா தளங்கள் மற்றும் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலைத்தொடர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக முட்டல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து சீராக வருகிறது கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் நீர்வரத்து சீரானதால்வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். தொடர் விடுமுறை எதிரொலியாக முட்டல் நீர்வீழ்ச்சி மற்றும் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தாரோடு வருகை தந்து நீர்வீழ்ச்சியில் குளிக்கும் பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி