ஆத்தூர் பணிகள் முடிக்கப்படாமலேயே தொழில் பேட்டை திறப்பு விழா

76பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உமையாள்புரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்பேட்டை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். பணிகள் எதுவும் முழுமை பெறாமலேயே தொழிற்பேட்டை திறக்கப்பட்டதாக பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும் பொழுது ; கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிற்பேட்டை அமைப்பதற்காக அரசு விவசாயிகள் நிலம் மற்றும் புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி பணிகளை துவங்கியது. இதுவரை எந்த பணிகளும் முடிவு பெறாத நிலையில் ஒரே ஒரு குடிநீர் தொட்டி மட்டும் கட்டப்பட்டிருப்பதாகவும், என் நிலத்தை சீர்படுத்துவது உள்ளிட்ட பயன்பாட்டுக்கான எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி