சேலம் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்புத்துறை மற்றும் ரோட்டரி மிட்டவுன் சங்கம், தனியார் பள்ளி, அரசு பள்ளி உடன் இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றி துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் வருகின்ற 31ஆம் தேதி நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீயணைப்புத்துறை நிலை அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் ரோட்டரி மிட்டன் சங்க நிர்வாகிகள் இணைந்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பட்டாசுகளை எப்படி வெடிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. குறுகலான குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது, குடிசைப்பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது, மருத்துவமனை பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கடைவீதிகளிலும் பட்டாசு வெடிக்க கூடாது, தமிழக அரசு அறிவித்துள்ள நேரப்படி பட்டாசு வெடிக்க வேண்டும், காலில் காலணி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் ரோட்டரி மிட்டன் நிர்வாகிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.