சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல் வாழை மஞ்சள் கரும்பு மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிணறுகளில் தண்ணீர் உயர்ந்துள்ளது இதானல் அதிக அளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர். கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தில் பூவாலை ரஸ்தாலி பச்சை வாழை செவ்வாழை உள்ளிட்ட ரகங்களை நடவு செய்து பராமரித்து வந்தனர். இந்த வாழை மரங்களில் பூ மற்றும் வாழைத்தார் பிடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றில் மேட்டுப்பட்டி கிராமம் பருப்பு மில் பகுதியில் விவசாயி சின்னசாமி என்பவரின் தோட்டத்தில் 250 க்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுமையாக உடைந்து சேதம் அடைந்தது விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் சூறாவளியால் அனைத்தும் சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.