தாடி வைத்திருந்த காரணத்தினால், பள்ளியிலிருந்து முஸ்லிம் மாணவர்கள் நீக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் ரவிக்குமார் எம்.பி. கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் இண்டர் காலேஜில் படிக்கும் ஃபர்மான் அலி, ஜீஷன் அலி என்னும் 2 முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்திருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீக்கத்தை ரத்து செய்து, பள்ளிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.