தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 21 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்தமிழகத்தில் ஒரு ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.