ரியல் லைஃப் அவதார் - வைரல் வீடியோ!

1043பார்த்தது
2022ல் வெளியான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற ஹாலிவுட் படத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இப்படத்தில் அவதார் கதாபாத்திரம் ஆழ்கடலில் விசித்திர மீன் ஒன்றின் மீது ஏறி பயணம் செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்குப் புதுமையாகத் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது. ஆனால் அப்படி ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர் நடுக்கடலில் ஒரு பெரிய மீனின் மீது சவாரி செய்து சிறிது தூரம் பயணிக்கிறார். நிஜ வாழ்க்கை அவதார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன

தொடர்புடைய செய்தி