கமுதி அருகே சோளப்பயிரை தின்று பலியான பசுமாடுகள்.!

66பார்த்தது
கமுதி அருகே சோளப்பயிரை தின்று பலியான பசுமாடுகள்.!
கமுதி அருகே சோளப்பயிரை சாப்பிட்டு 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள சின்னஆனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நல்லாளு(47).

இவர் குடும்ப வாழ்வாதாரத்திற்க்காக 3 பசுமாடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் மூன்று பசு மாடுகளும் மேய்ச்சலுக்கு சென்ற போது அருகில் உள்ள வயலில் சோள பயிரை சாப்பிட்டு பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தது. குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கி, பால் கொடுத்து வந்த அந்த பசு மாடுகள் மூன்றும் உயிரிழந்ததால் கூலி தொழிலாளியின் குடும்பமே கட்டி அணைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கூலித் தொழிலாளியின் தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அன்றாடக் கூலி வேலை பார்த்து வரும் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை கூலித்தொழிலாளி நல்லாளு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.