பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்.!

51பார்த்தது
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 13 முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று அதிகாலை குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்துடன் வந்தார்.

பின்னர் காலை 10: 30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் ஆடி தேரில் அமர்ந்தார். தொடர்ந்து கருப்பணசுவாமிக்கு பூஜைகள் நடந்தது, ரத வீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாள் தேரோட்டம் நடந்தது.

மதியம் 1: 30 மணிக்கு தேர் நிலையை அடைந்து பெருமாள் கோயில் பிரகாரத்தில் ஆடி வீதியில் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் ஏராளமான தேங்காய்களை உடைத்து வழிபட்டனர்.
இரவு 8: 00 மணிக்கு சயன கோலத்தில் பட்டுப்பல்லத்தில் ரத வீதியில் வலம் வந்து கோயிலை அடைந்தார்.

இன்று காலை உற்ஸவ சாந்தி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி