பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் மூலிகை திரவியங்களால் அபிஷேகம்.!

72பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி 108 மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சூடியூரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு மாலை தொடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் சூடியூர் என பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது முன்னதாக சிறப்பு யாகசாலை நடைபெற்றது இதனை அடுத்து சாத்தார் உடைய அய்யனார் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், பாரி, 108 அபிஷேக திரவியங்களையும், மண் கலைய குடங்களில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரை கைலாய வாத்தியங்கள் முழங்கவும் மற்றொருபுறம் சிவனடியார்கள் திருவாசகம் பாடவே சிவாச்சாரிகள் கோவிலை வலம் வந்து மூலவருக்கு புனித நீரால் அபிஷேகமும் நடைபெற்று பக்தர்கள் மீதும் தெளிக்கப் பட்டு பஞ்சமுக தீப ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டன.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆலவாயர் அருட்பணி மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி