கீழக்கரை நகராட்சி பராமரிக்கப்படாமல் உள்ள கட்டணக் கழிப்பிடங்களில் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேட்டால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் அவைகளை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டில் அமைந்து இருக்கும் 'மீனவர் குப்பம்' பகுதியில் சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக நவீன கட்டடக் கழிப்பறை நகராட்சி சார்பாக கட்டப்பட்டு இன்றுவரை பயனற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மது பிரியர்களுக்கு மது அருந்தக்கூடிய இடமாக பயன்பட்டு வருகிறது. இதனை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.