ராமநாதபுரம்: விடுதியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

57பார்த்தது
ராமநாதபுரம்: விடுதியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த காவிய தர்ஷினி என்ற மாணவி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் இன்று (நவம்பர் 29) காலை விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

தர்ஷினியின் மரணம் தற்கொலையா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி