சாயல்குடியில் விஷவாயு பரவியதாக பொதுமக்கள் பீதி.!

56பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையம் அருகே திடீரென விஷவாயு பரவுவதாகவும், சிலர் மயக்கம் அடைந்ததாகவும் பரவிய செய்தியால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீட்டை காலி செய்து ஓட்டம் எடுத்தனர். இதனை அடுத்து சாயல்குடி பகுதி முழுவதும் விஷவாயு பரவுவதுவதாக வதந்தி ஏற்பட்டது. உடனடியாக சம்பவம் அறிந்து அந்தப் பகுதிக்கு வந்த சாயல்குடி தீயணைப்புத்துறை மற்றும் சாயல்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் விசாரணையில் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் பல காலங்களாக பயன்பாடு இல்லாத நிலையில் கிடந்த குளோரின் வாயு சிலிண்டரில் வாயு கசிவு ஏற்படுவதாக தெரிந்துள்ளது.

இதனால் வாயு கசிவு காற்றில் கலந்து அந்தப் பகுதி முழுவதும் பரவியதால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சாதுரியமாக செயல்பட்டு இரண்டில் இருந்து வெளிவந்த வாய் கசிவை நிறுத்தினர்.

இதனை அடுத்து தீயணைப்பு மீட்பு துறையினருடன் இணைந்து சாயல்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டரை பாதுகாப்பாக ஊருக்கு வெளியே அப்புறப்படுத்தி வாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டரை செயல் இழக்க செய்தனர்.

தொடர்புடைய செய்தி