பெருநாழியில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 29) மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பெருநாழியில் வருகிற திங்கள்கிழமை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் தலைமையில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பெருநாழி, பொந்தம்புளி, இடிவிலகி, எம். புதுக்குளம், காடமங்களம் ஆகிய 5 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.